Home உலகம் “அரசு விமான விபத்தில் அரசியல்வாதி உயிரிழப்பு”

“அரசு விமான விபத்தில் அரசியல்வாதி உயிரிழப்பு”

கொலம்பிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எம்.பி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். வெனிசுவேலா எல்லையை ஒட்டிய பகுதியில், கொலம்பிய அரசுக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது.

குக்கட் நகரில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அது விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விமானத்தில் இரண்டு விமான ஊழியர்கள் மற்றும் 13 பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் எம்.பி என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.