அமெரிக்காவில் கண்கள் தெரியாததும், காதுகள் கேட்காததும் ஆகிய ஒரு நாய்குட்டியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சுற்றுப்பாதுகாப்பு காவலருக்கு எதிராக, 44 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஸ்டர்ஜன் பகுதியில், திறந்த வெளியில் விளையாடிக் கொண்டு இருந்த வளர்ப்பு நாயை அதன் உரிமையாளர் பிடிக்க முயன்றார். அந்த நேரத்தில், அந்த நாய் பொதுமக்களுக்கு ஆபத்தாக இருக்கிறது என்று தவறாக நினைத்த ஒரு காவலர், பாதுகாப்பு காரணமாக அது மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நாயை கொன்றார்.
கடந்த ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, நாயின் உரிமையாளர்களுக்கு 44 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








