இந்த உலகமே அதிசயங்கள் நிறைந்து காணப்படுது. அதுல ஒரு அதிசயம், தென்கொரியாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜிண்டோ தீவில் கடல் பிரியும் அதிசயமானது நிகழ்கிறது.
கடல் பிரிவதற்கு சயின்டிபிக்கா ரீசன் சொன்னாலும் அங்கு இருக்க உள்ளூர் மக்களின் நம்பிக்கைப்படி ஒரு கதை சொல்றாங்க.
பழங்காலத்துல ஜிண்டோ தீவுல மக்கள் வாழ்ந்திருக்காங்க. அங்கு வந்து புலிகள் அடிக்கடி தாக்குவதால் அவங்க தங்களை பாதுகாக்க மோடோ தீவுக்கு குடிப்பெயர்ந்து சென்றிருக்காங்க. அப்போ ஒரு மூதாட்டி மட்டும் ஜின்டோ தீவுல சிக்கி இருக்காங்க .
தனியா இருந்த அந்த மூதாட்டி குடும்பத்தோட சேரணும்னு கடல் தெய்வமான சிமடோக் என்பவரை வழிபட்டு இருக்காங்க அவங்களோட பிரார்த்தனையை கேட்டு கடலை பிரித்து நடந்து செல்ல கடவுள் பாதை உருவாக்கினதாகவும் அந்த மூதாட்டி தனது குடும்பத்தோட மீண்டும் சேர்ந்தாங்கன்னு மக்கள் நம்புறாங்க இதுதான் ஜிண்டோ கடல் பிரிவுக்கு காரணமா புராணத்தில சொல்லப்படுது.
சயின்டிபிக்கா இது ஒரு டைடல் பினோமினன் அப்படின்னும் வருடத்துல சில நாட்கள் சந்திரன், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது கடல் நீர் மிக வலுவாக விலகி சுமார் 2.8 km நீளமும் 40 முதல் 60 மீட்டர் அகலம் கொண்ட நிலப்பாதை ஏற்படுதும்.
அந்த பாதை ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை மட்டுமே வெளிப்படும். இதுதான் சைன்டிபிக்கா சொல்ற ரீசன்.
மக்களோட நம்பிக்கை படியும் சன்டிபிக் படியும் காரணங்கள் சொன்னாலும் இது ஒரு விழாவாகவே அந்த நாட்டு மக்கள் கொண்டாடுறாங்க.
ஒவ்வொரு வருஷமும் மார்ச் முதல் ஏப்ரல் மாதத்தில் ஜின்டோசி பார்ட்டி பெஸ்டிவல் நடத்தப்படுது. அந்த சமயம் அந்த மக்கள் பாரம்பரிய இசை, நாட்டியம், வழிபாடு மற்றும் சடங்குகளை கடல் பாதையில் பண்றாங்க.
அந்த டைம் அவங்களுடைய பாரம்பரியத்தை பிரதிபலிக்கிற மாதிரி நிறைய கலை நிகழ்ச்சிகளையும் நடத்துறாங்க. இந்த நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பயணிகள் அங்க வந்து பாகறாங்க இதை மிராக்கிள் ஆப் மோசஸ் அப்படின்னும் சொல்றாங்க .
அந்த டைம் வர பயணிகள் அந்த கடல் பாதையில் நடந்து கடலோட அதிசயத்தை ரசிக்கிறாங்க இந்த அதிசயம் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்தாலும் இந்த விழாவானது மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை நடைபெறுகிறது.
இயற்கையோடு அதிசயமும் உள்ளூர் மக்களோட நம்பிக்கையும் சேர்ந்து இதை ஒரு சுற்றுலா தளமாக மாத்தி இருக்கு. இது தென்கொரியாவில் பெரிய கலாச்சார சுற்றுலா விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.








