கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவ மாணவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
University of Toronto Scarborough (UTSC) கேம்பஸில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த சிவங் அவஸ்தியை மர்மநபர் துப்பாக்கியால் சுட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த தகவலை உறுதிப்படுத்திய கேனடாவுக்கான இந்திய தூதரகம், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகம் அருகே மாணவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சக மாணவர்களில் பெரும் பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.






