Home உலகம் ”UAE விசா தடையா… தூதரகங்கள் மறுப்பால் குழப்பம் அதிகரிப்பு”

”UAE விசா தடையா… தூதரகங்கள் மறுப்பால் குழப்பம் அதிகரிப்பு”

கடந்த வாரம் H-1B விசாவுக்கான விண்ணப்ப கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்நிலையில் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது புதிய 2026 விசா கொள்கையின் ஒரு பகுதியாக ஒன்பது நாடுகளின் குடிமக்கள் மீது சுற்றலா மற்றும் வேலைக்கான விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதனை சில தூதரகங்கள் மறுத்து வருகின்றன.

எந்தெந்த நாட்டிற்கு தடை மறுக்கும் நாடுகள் எவை? விரிவாக பார்க்கலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது புதிய 2026 விசா கொள்கையின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான், லிபியா, ஏமன், சோமாலியா, லெபனான், பங்களாதேஷ், கேமரூன், சூடான், உகாண்டா ஆகிய ஒன்பது நாடுகளின் குடிமக்கள் இனி யு.ஏ இ க்கு புதிய சுற்றலா விசா அல்லது வேலை அனுமதி பெறும் விசா வாங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கனவே விசா வைத்திருக்கும் இந்த ஒன்பது நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த அறிவிப்பால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இனி புதிதாக விசா வழங்குவது நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதுகாப்பு சிக்கல்கள், தீவிரவாத அச்சங்கள், தூதரக உறவுகளில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் தொற்றுநோய் தொடர்பான பயண கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதை வங்கதேசம் மறுத்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வங்கதேச நாட்டினருக்கு எந்த விசா கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்பதை வங்கதேச மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். சமூக ஊடக அறிக்கைகள் தவறானவை என்றும் அவர் கூறியுள்ளார். யு.ஏ இ -க்கான வங்கதேச தூதர் தாரிக் அகமது சுற்றலா அல்லது வேலைக்கான விசா தடை தொடர்பாக எமிரேட்ஸ் அதிகாரிகளால் எந்த அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

வங்கதேசநாளிதழ்கலான பிசினஸ் ஸ்டாண்டர்டுக்கு அளித்த பேட்டியில் இதுவரை எங்கள் தூதரகம் அத்தகைய தடை குறித்து ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து எந்த தகவலையும் பெறவில்லை என்று தாரிக் அகமது கூறியிருக்கிறார். துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸல் உள்ள வங்கதேசத்தின் தூதர் முகமது ரசேது ஜாமான் யுஏஇயில் உள்ள வங்கதேச மக்கள் தொகை சுமார் ஒரு மில்லியன் என்று மதிப்பிட்டுள்ளார்.

குளோபல் மீடியா இன்சைட் இந்த எண்ணிக்கையை தோராயமாக 0.84 மில்லியன் என்று கூறுகிறது. இது வங்கதேசத்தினரை இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு பிறகு நாட்டின் மூன்றாவது பெரிய வெளிநாட்டினராக காக்குகிறது. காலேஜ் டைம்ஸுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஷதுஜமான் வங்கதேச நாட்டினருக்கான விசா செயல்முறைகளை எளிதாக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்துடன் நடந்து வரும் பேச்சு வார்த்தைகள் குறித்து குறிப்பிட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸன் வளர்ச்சி கதையில் ஆழமான ஒருங்கிணைப்புக்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் தான் ஒன்பது நாடுகளுக்கு விசா இல்லை என்று எமிரேட்ஸ் கூறியுள்ளதாக வெளியாகும்தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையில் இதுவரை யு.ஏ தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை என ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.