Home தமிழகம் ’’ தீர்ப்பு ’’தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு :

’’ தீர்ப்பு ’’தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு :

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள உள்ள ஒப்பந்ததாரர் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு பணி வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி அளித்துள்ளதை அடுத்து உழைப்போர் உரிமை இயக்கம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவது எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கே சுரேந்தர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது அப்பொழுது மனுதாரர் சிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் பணி நிரந்தரம் வழங்க கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பம் தொழிலாளர் நீதிமன்ற விசாரணையில் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் சுமார் 2000 தூய்மை பணியாளர்கள் வேலை பரிபோகும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் முதலில் தொழிலாளர் நீதிமன்றத்தில் அனுமதிக்க அனுமதி கேட்டு வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும் .எனவும்

ஆனால் அவ்வாறு செய்யாமல் சுமார் 12 ஆண்டுகளாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை குப்பைகளை போல் தூக்கி எறிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று தமிழக அரசு தரப்பில் ஆஜராகி இருந்த அரசு தலைமை வழக்கறிஞர் பணியாளர்களை வீசி எறிய போவதில்லை எனவும் வேலை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள் எனவும் ஒப்பந்தம் மூலம் பணி வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தூய்மை பணி ஏற்கனவே தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து ஆறாவது மண்டலங்களில் மட்டும் தூய்மை பணி தனியாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்திருக்கிறார்.

தற்பொழுது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுமார் 2000 கீழ் பணியாளர்களை ஒப்பந்த நிறுவனங்கள் ஊதியத்துடன் வருங்கால வைப்பது இன்சூரன்ஸ் குறித்த கழிவுக்ளுடன் வேலை வழங்கப்படும்

எனவும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இதற்கான காலநீட்டி செய்திருப்பதாகவும் தெரிவித்தார் ஒப்பந்த நிறுவனம் தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கினர் தனியாருக்கு வழங்குவது அரசினுடைய கொள்கை முடிவு எனவும் .

இதில் விதிமிரல் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் எனவும் தெரிவித்தார் .அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து வழக்கினுடைய தீர்ப்பினை நீதிபதி சுரேந்தர் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கின்றார்.