Home Uncategorized “இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு: அதிமுக–பாஜக கூட்டணிக்கு முக்கிய திருப்புமுனை?”

“இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு: அதிமுக–பாஜக கூட்டணிக்கு முக்கிய திருப்புமுனை?”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 8:00 மணிக்கு உள்துறை அமைச்சர் அமிதஷாவை நேரில் சந்தித்து பேசுகிறார். செங்கோட்டையனின் சந்திப்பை தொடர்ந்து இபிஎஸ் இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அவர் நேரடியாக பல்வேறு கோரிக்கை மனுக்களையும் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்தினா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அவர் திண்டுக்கலில் நடைபெற்ற அந்த மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்தனா விருது வழங்க வேண்டும் என்று அவர் பேசினார்.

அதை தொடர்ந்து அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பிலும் அதே கோரிக்கையை அவர் வலியுறுத்தி இருக்கிறார். தமிழக அரசியலிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏனென்றால் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்று நேற்று அவர் வலியுறுத்திய நிலையில் இன்று இந்த
கோரிக்கையை வலியுறுத்த இருக்கிறார்.

மேலும் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியவரை மீண்டும் கட்சியில் இணைக்க முடியாது. அவர்கள் அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்களை கடத்தியவர்கள் அவர்களை சேர்க்க முடியாது என்று நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

மேலும் செங்கோட்டையனை பற்றி ஒன்றும் நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் சில கைக்குழிகளுக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனால் அமித்ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு அதிமுக பாஜக கூட்டணியை தொடர்பாக மிக முக்கியமான அறிவிப்பும் இபிஎஸ் பேட்டியும் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது