வாக்களிப்பதை எளிமையாக்கும் முயற்சியாக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி வாக்காளர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் முதல் முறையாக வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும், வாக்காளரின் பெயர் மற்றும் வரிசை எண்கள் பெரிய மற்றும் தடிமனான எழுத்துக்களில் அச்சிடப்படும்.
இந்த புதிய முறை பீகாரில் நடைபெறும் தேர்தல்களில் முதலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.








