உலக புகழ் பெற்ற மைசூர் தசரா விழா நாளை நடைபெறுவது ஒட்டி மைசூர் நகரம் மற்றும் அரண்மனை விழா கோலாகலம் பூண்டுள்ளது. விழாவின் சிகர நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நாளை மாலை நடைபெறுகிறது.
கர்நாடகாவினுடைய நடகப்பா அதாவது கர்நாடகாவின் திருவிழா என்று போற்றக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க தசரா விழாவானது நாளை நடைபெற இருக்கிறது. 415ஆம் ஆண்டாக இந்த வருடம் நடக்கக்கூடிய இந்த தசரா விழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.
தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக மகளிர் தசரா, விவசாயிகள் தசரா, இளைஞர் தசரா, சிறுவர் தசரா என பல்வேறு வகையான தசரா விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தன. இதை ஒட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுன.
10 நாட்களாகவே இந்த மைசூர் நகரம் விழா கோலம் பூண்டிருந்தது. இந்த தசரா விழாவினுடைய முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நாளை நடைபெற இருக்கிறது. இதற்காகத்தான் இந்த ஒரு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக 14 யானைகளினுடைய ஊர்வலம் என்பது நடைபெறுகிறது.
நாளை மட்டுமே பல லட்சம் பேர் இந்த யானை ஊர்வலத்தை பார்ப்பதற்காக மைசூரில் திறள இருக்கிறார்கள். குறிப்பாக 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டேஸ்வரியை வீற்றிருக்கக்கூடிய அந்த தங்க அம்பாரியை யானை சுமந்து வர 14 யானைகளினுடைய ஊர்வலமும் இந்த பகுதியில் நடைபெற இருக்கின்றது.
அதற்கு முன்பாக 50க்கும் மேற்பட்ட அலங்கார அணிவகுப்புகளும் நடைபெற இருக்கிறது. நாளை கர்நாடகவினுடைய முதலமைச்சர் சித்தராமையா துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள். மன்னர் வாரிசுகளும் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள்.
இதனை ஒட்டி மைசூர் நகரம் விழா கோலம் பூண்டிருக்கின்றது. மைசூர் அரண்மனையும் 1,20,000 அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் முழுமையாக ஜொலிக்கிறது. இது மட்டுமில்லாமல் மைசூர் நகரம் முழுமையாகவே ஆங்காங்கே அலங்கார மின் விளக்கு தோரணங்கள் போடப்பட்டு சாலை முழுவதும் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
இந்த விழாவில் பங்கேற்கக்கூடிய அந்த 14 யானைகளும் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இந்த அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டன. பல்வேறு வனப்பகுதிகளில் வளர்க்கக்கூடிய அந்த யானைகள் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு சிறப்பு
பயிற்சிகளும் நடத்தப்பட்டன.
குறிப்பாக இந்த மக்கள் கூட்டத்திற்குள் செல்லும் பொழுது அச்சப்படாமல் சென்று வருவதற்கு பயிற்சிகள் நடைபயிற்சி என்பதும் கொடுக்கப்பட்டது. அரண்மனையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய அந்த பன்னி மண்டபம் என்று சொல்லக்கூடிய இடத்தின் வரைக்கும் இந்த அலங்கார உறுதியும் உறுதி அணிவகுப்பும் யானைகளுடைய நடைபயணமும் நாளை ஊர்வலமும் நடைபெற இருக்கிறது.
இதற்காகத்தான் இந்த யானைகளுக்கும் இரண்டு மாதங்களாக பல்வேறு கட்ட பயிற்சிகளும் நடைபெற்றிருக்கின்றன. நேற்று அந்த இறுதிக்கட்ட பயிற்சிகள் முடிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் நாளை நடைபெறக்கூடிய இந்த தசரா விழாவிற்கான அந்த ஏற்பாடுகள் தற்பொழுது செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த விழாவை பொறுத்தவரைக்கும் கர்நாடகாவில்லிருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.
ஒரு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்பார்கள் என்பதால் ஒரு விரிவான ஏற்பாடுகளும் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.







