Home இந்தியா “Bit கொடுக்க ஜன்னலில் தொங்கிய பெற்றோர்… ட்ரோனில் சிக்கிய 12ம் வகுப்பு தேர்வு அதிர்ச்சி!”

“Bit கொடுக்க ஜன்னலில் தொங்கிய பெற்றோர்… ட்ரோனில் சிக்கிய 12ம் வகுப்பு தேர்வு அதிர்ச்சி!”

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போது பரபரப்பான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.

சௌசாலா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெற்ற ஆங்கிலப் பரீட்சையின் போது, மாணவர்களுக்கு உதவும் நோக்கில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிட்பேப்பர்கள் வழங்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு மைய கட்டிடத்தின் ஜன்னல் வழியாக குறிப்புகள் தூக்கி எறியப்பட்ட காட்சி ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேர்வு முறைமையில் குற்றச்செயல்கள் இடம்பெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.