Home தமிழகம் “2026 விடுமுறை பட்டியல் வெளியானது – தீபாவளி எந்த நாள்னு தெரியுமா?”

“2026 விடுமுறை பட்டியல் வெளியானது – தீபாவளி எந்த நாள்னு தெரியுமா?”

அடுத்த வருடம் எங்கெல்லாம் டூர் போகலாம், எந்தெந்த விசேஷங்களுக்கு ஊருக்கு போகலாம் என்று இப்போதே பிளான் பண்ணுகிறவரா நீங்க? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ்!

தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் முழு பட்டியலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.

மொத்தம் 24 நாட்கள் நமக்காக விடுமுறை காத்திருக்கிறது! இந்த சந்தோஷமான செய்தியோடு, நம்மில் பலருக்கு ஒரு சின்ன வருத்தமான செய்தியும் இருக்கு.

என்னன்னா, நம்ம எல்லாருமே ஆவலாக எதிர்பார்த்திருந்த தீபாவளி பண்டிகை அடுத்த வருடம் ஞாயிற்றுக்கிழமை வருது. அதுமட்டுமில்லாமல் தைப்பூச திருநாளும் ஞாயிற்றுக்கிழமையில்தான் வருகிறது.

ஆக நமக்கு கிடைக்க வேண்டிய இரண்டு முக்கியமான லீவுகள் வார இறுதி விடுமுறையோடு சேர்ந்து போயிட்டுச்சு. ஆனா கவலைப்படாதீங்க! அந்த வருத்தத்தைக் கட்டி அடிக்குற மாதிரி ஜனவரி மாதம் நமக்கு ஒரு ஜாக்பாட் காத்திருக்கிறது!

ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம் — இப்படிச் ஜனவரிலேயே மொத்தம் ஐந்து நாட்கள் பொது விடுமுறை இருக்கு!

அதேபோல் மார்ச், ஏப்ரல், அக்டோபர் மாதங்களிலும் தலா மூன்று நாட்கள் விடுமுறை வருது. இதில் ஏப்ரல் 1ம் தேதி வங்கிகளுக்கு மட்டும், வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மகர சங்கராந்தி, சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, கிறிஸ்துமஸ் போன்ற அனைத்து முக்கிய மத பண்டிகைகளுக்கும் மற்றும் தேசிய தினங்களுக்கும் விடுமுறை உண்டு.

ஆக மொத்தம் 24 நாட்கள் விடுமுறையோடு 2026 ஆம் ஆண்டு நம்மை வரவேற்க காத்திருக்கிறது! அதனால் இப்போவே உங்க காலண்டரை எடுத்துக்கொங்க, டூர் பிளான், லீவு பிளான் எல்லாத்தையும் சட்டு புட்டுன்னு போட்டு வச்சுக்கங்க!