Home இந்தியா “ஆதார் இல்லைனா டிக்கெட் இல்லை – ஜனவரி 12 முதல் புதிய விதி”

“ஆதார் இல்லைனா டிக்கெட் இல்லை – ஜனவரி 12 முதல் புதிய விதி”

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜனவரி 12 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

ஏற்கனவே தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயமாகிய நிலையில், வழக்கமான முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முறைக்கேடுகளைத் தடுக்கும் நோக்கில் ஆதார் அட்டை இணைப்பை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இடைத்தரகர்கள் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்வதைத் தடுக்க ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் முறைக்கேடுகளைத் தடுக்க, ஐஆர்சிடிசி இணையதளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயமாக அமலில் உள்ளது.