Home திரையுலகம் ”விஜயின் ஜனநாயகன் ஆடியோ விழாவில் பரபரப்பு!

”விஜயின் ஜனநாயகன் ஆடியோ விழாவில் பரபரப்பு!

நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், தவெக கொடியை கட்டிய இளைஞனை மலேசிய போலீசார் கைது செய்தனர்.

விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவின் புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் சார்ந்த குறியீடுகள், பேச்சுகள், கட்சிக் கொடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என மலேசிய அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு இளைஞன் தவெக கொடியை கொண்டு வந்து கேமரா முன்பு காட்டினார். இதையடுத்து, போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர்.