நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார். அவருக்கு வயது 90. மலையாள சினிமாவின் ஜாம்பவானான மோகன்லால், தனது துறை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.
மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், இளமக்கரையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தபோது, தனது 90வது வயதில் உயிரிழந்தார்.
அண்மையில் மோகன்லால், தாதா சாகேப் பால்கே விருதை தனது தாயாருடன் பகிர்ந்து கொண்டு, “இது என் வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்” என ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
சாந்தகுமாரியின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.








