மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று மாலை மருத்துவமனையிலிருந்து சோனியா காந்தி வீடு திரும்பினார். அவர் தனது இல்லத்தில் மேலதிக சிகிச்சையை தொடர்வார் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, சோனியா காந்திக்கு இருமல் பிரச்சனை இருப்பதாகவும், டெல்லியிலும் நிலவி வரும் காற்று மாசு காரணமாக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.








