மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததிலிருந்து நடிகர் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகை மிருணாள் தாக்கூரை தனுஷ் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், தனுஷுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று அவருக்கு நெருக்கமான பாலிவுட் இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “இப்படிப்பட்ட திருமணம் நடைபெறுவதாக தனுஷ் என்னிடம் எதுவும் கூறவில்லை. நாங்கள் தினமும் செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி திருமணம் செய்து கொள்வார்?” எனக் கூறியுள்ளார்.
மேலும், விவாகரத்து நடந்த போது, மகன்கள் யாத்திரா மற்றும் லிங்கா விஷயத்தில் எப்போதும் சேர்ந்து இருப்போம் என்று தனுஷும் அவரது முன்னாள் மனைவியும் முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷை பொறுத்தவரை, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்றும், அதற்குக் காரணமாக தனது மகன்களுக்கு ‘சித்தி’ என்ற நிலையை ஒருவருக்கு முன்வைக்க அவர் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும் என்பது உண்மை என்றாலும், அது திருமணத்தில் முடியும் என்று சொல்ல முடியாது என்றும் அந்த பாலிவுட் இயக்குநர் தெரிவித்துள்ளார்.








