Home இந்தியா “ஒரே வாழ்நாள் வாய்ப்பு: RBI வழங்கும் டிஜிட்டல் மோசடி நஷ்டஈடு திட்டம்”

“ஒரே வாழ்நாள் வாய்ப்பு: RBI வழங்கும் டிஜிட்டல் மோசடி நஷ்டஈடு திட்டம்”

நடந்துவரும் டிஜிட்டல் மோசடிகளால் மக்கள் மனதில் ஏற்படும் பயத்தை குறைக்க ரிசர்வ் வங்கி (RBI) ஒரு புதிய பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தவறுதலாக OTP பகிர்ந்தாலும் அல்லது லிங்க் கிளிக் செய்தாலும், அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அதிகபட்சம் ரூ. 25,000 வரை அல்லது இழந்த தொகையின் 85% வரை வழங்கப்படும்.

RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்ததாவது, இந்தியாவில் நடக்கின்ற 65% டிஜிட்டல் மோசடிகள் ரூ. 50,000 க்கும் குறைவான தொகையில்தான். அதன்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தினர் அதிக பாதிப்பை எதிர்கொள்வதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த நஷ்டஈடு திட்டம் ஒரு வாடிக்கையாளரின் வாழ்நாளில் ஒரே முறை மட்டும் பயன்படுத்த முடியும். நஷ்டஈடு அளவு, மோசடியில் இழந்த தொகையின் 70% ரிசர்வ் வங்கி, மீதம் வாடிக்கையாளர் மற்றும் வங்கி பகிர்ந்துகொள்ளும் விதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதிகபட்ச நஷ்டஈடு ரூ. 25,000 வரை வழங்கப்படும்.

RBI துணை ஆளுநர் ஸ்வாமிநாதன் ஜே விளக்கினதாவது, இந்த நிதி வங்கிகளில் பல வருடங்களாக உரிமை கோரப்படாத டெபாசிட் பணத்திலிருந்து உருவாக்கப்பட்ட Deposit Education and Awareness Fund மூலம் வழங்கப்படும்.

மேலும், வங்கிகளில் தவறான விற்பனை, கடன் வசூல் முறைகள், பொறுப்பு வரம்புகள் மற்றும் பரிவர்த்தனைகள் தாமதமாக செல்லும் போது வரும் அபாயங்களை கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இதன் மூலம், வயது முதிர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் கூட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கையாளப்பட உள்ளன.

RBI எடுத்துள்ள இந்த புதிய பாதுகாப்பு திட்டம், டிஜிட்டல் பரிவர்த்தனையில் மக்களுக்கு ஏற்படும் பயத்தை குறைக்கும் வகையில் அமைய உள்ளது. மக்கள் பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனை செய்யலாம் என்ற நம்பிக்கையையும் இது உருவாக்குகிறது.

ஆனால் வாடிக்கையாளர்கள் இதற்காக அலட்சியமாக இருக்க கூடாது. OTP யாருக்கும் பகிரக்கூடாது மற்றும் தேவையற்ற லிங்க்களை கிளிக் செய்ய கூடாது.