பான் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகளும் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான செய்தி இது. உங்களுடைய பான் கார்டு விதிகளை மத்திய அரசு அதிரடியாக மாற்றியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள புதிய வருமான வரி சட்டத்தின்படி, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவிலும் வருமான வரித்துறையின் கண்காணிப்பு இருக்கும்.
இனி வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதில் கூடுதல் கவனம் தேவை. ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் நீங்கள் ரொக்கமாக டெபாசிட் செய்தால், பான் கார்டு விவரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல; ஒரு நிதியாண்டில் உங்கள் வங்கி கணக்குகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிமாற்றம் நடந்தால், அது நேரடியாக வருமான வரித்துறையின் கண்காணிப்பிற்கு செல்லும்.
சொத்து வாங்குபவர்களுக்கும் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கினால் பான் கார்டு கட்டாயம் இருந்தது. இனி அந்த வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இது ஓரளவு நிம்மதி அளித்தாலும், கார் வாங்குபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு வந்துள்ளது.
இதுவரை எந்த விலையில் கார் வாங்கினாலும் பான் கார்டு கேட்கப்பட்டு வந்தது. இனி 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கார் வாங்கினால் மட்டுமே பான் கார்டு கட்டாயம்.
மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால், இனி நீங்கள் ஒரு ஆடம்பர ஹோட்டல் அல்லது பேங்க் வாட் ஹாலில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பில் கட்டினால், அங்கே உங்கள் பான் கார்டை கொடுக்க வேண்டியது கட்டாயம்.
இதன் மூலம், உங்களுடைய ஆடம்பர செலவுகளையும் வருமான வரித்துறை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. உங்கள் வங்கி கணக்குகள் ஏற்கனவே பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிமாற்றமும் ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மெண்ட் (AIS) அறிக்கையில் பிரதிபலிக்கும்.
வருமானத்தை மறைத்து வரிப்பெறுபவர்களை கண்டறியவே இந்த கடுமையான விதிகள் கொண்டுவரப்படுகின்றன. 2027ஆம் ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் என்பது ஒரு கிளிக்கில் செய்யக்கூடிய அளவிற்கு எளிமையாக்கப்படும். அதேவேளை வெளிப்பணித்தன்மையை அதிகரிக்க பான் கார்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கிரிப்டோகரன்சி வாங்குபவர்கள் முதல் ஹோட்டலில் உணவு சாப்பிடுபவர்கள் வரை, இனி யாரும் வருமான வரித்துறையின் பார்வையிலிருந்து தப்ப முடியாது என்பது நிதர்சனம்.
இந்த புதிய மாற்றங்கள் சாதாரண மக்களை பாதிக்குமா, அல்லது வரிவாய்ப்பை அதிகரிக்குமா என்பது கவனத்திற்கு வேண்டும்.








