Home திரையுலகம் “சந்தோஷ பயணம் சோகமாக முடிந்தது… சித்ரா ஐயரின் சகோதரி மரணம்”

“சந்தோஷ பயணம் சோகமாக முடிந்தது… சித்ரா ஐயரின் சகோதரி மரணம்”

பிரபல பின்னணி பாடகி சித்ரா ஐயரின் மூத்த சகோதரி ஷாரதா ஐயர், ஓமன் நாட்டில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். ஓமனின் ஜெபெல் ஷம்ஸ் மலைப் பகுதியில் ட்ரெக்கிங் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது இந்த துரதிருஷ்டவசமான விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

52 வயதான ஷாரதா ஐயர், கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விபத்து ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்றதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களை அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில் சித்ரா ஐயரின் தந்தை மறைந்த நிலையில், குறுகிய கால இடைவெளியில் குடும்பத்தைத் தாக்கிய இரண்டாவது பெரிய இழப்பாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

சகோதரியின் மறைவுக்கு பாடகி சித்ரா ஐயர் சமூக வலைதளங்களில் உருக்கமான இரங்கல் செய்தியை பகிர்ந்துள்ளார். ஷாரதா ஐயரின் உடல் ஓமனிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, ஜனவரி 7ஆம் தேதி இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துயரமான சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.