தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியானது ரஜினியின் கூலி திரைப்படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள திரையரங்குகளுக்கு வருகை தந்திருக்கிறார்கள்.
ரஜினி அவர்கள் திரையுலகத்தில் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் தான் கூலி திரைப்படமானது மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கூலி திரைப்படம் முழுவதுமாக அனைத்து திரையங்களும் ஆக்கிரமித்து அதிகமான திரையரங்ககளில் வெளியாகக்கூடிய ஒரு திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.
திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் பெருமளவில் தியேட்டர்களுக்கு தற்போது வந்திருந்தாலும் கூட தமிழ் திரை உலகில் இருக்கக்கூடிய செலிபிரிட்டிகள் பலரே இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு ரஜினியின் ரசிகர்களாக மாறி தற்போது வந்த வண்ணமாக இருக்கின்றனர்.
சென்னை குரோம்பேட்டையில் இருக்கக்கூடிய வெற்றி திரையரங்கத்திற்கு திரைப்படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மற்றும் திரைப்படத்தில் நடித்திருக்கக்கூடிய நடிகர் ஸ்ருதிஹாசன் ஆகியோர் வந்திருக்கின்றனர்.
நடிகர் ஸ்ருதிஹாசன் கூலி திரைப்படத்தில் மிகவும் பாப்புலரான மோனிகா பாடலில் அணிந்த ஆடையை போல சிகப்பு நிறை உடையை அணிந்து வந்த நிலையில் அங்கு இருக்கக்கூடிய ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர்.
அதேபோல சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரும் CEO- மான காவியா மரனும் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக நேரில் திரையரங்கிற்கு தற்போது வந்திருக்கிறார்.
இந்த வகையில் குரோம்பேட்டை வெற்றி திரையரகமானது முழுவதுமாக செலிபிரிட்டிகளால் தற்போது முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.








