Home திரையுலகம் “மதன் கௌரியை அதிர்ச்சி அடையச் செய்தது துபாய் – முழு கதை!”

“மதன் கௌரியை அதிர்ச்சி அடையச் செய்தது துபாய் – முழு கதை!”

பிரபல YouTube ராக அறியப்படுபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதன் கௌரி. இவருக்கு YouTube தளப்பக்கத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

அண்மையில் மதன் கௌரி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். துபாய்க்கு சென்ற மதன் கௌரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை வருவதற்காக துபாய் விமான நிலையம் வந்தபோது அவரது மொபைல் போனை விமான நிலையத்திலேயே தவறவிட்டுள்ளார்.

விமான நிலையம் மிகவும் பெரியது என்பதால் தேடியும் மொபைல் கிடைக்கவில்லை. இது குறித்து விமான பணிப்பெண் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு கவலைப்பட வேண்டாம். நீங்கள் இந்தியா சென்ற பிறகு உங்களது மொபைலில் அடையாளங்கள் குறித்து துபாய் விமான நிலையத்திற்கு மெயில் அனுப்புங்கள் என அந்த விமான பணிப்பெண் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

இனி எப்படி போன் கிடைக்கும் என நம்பிக்கை இல்லாமலேயே மதன் கௌரி தனது மொபைலின் மாடல் கலர் என அங்க அடையாளங்களை துபாய் விமான நிலையத்திற்கு மெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களிடமிருந்து உங்களது மொபைல் கிடைத்துவிட்டது என மெயிலில் பதில் வந்துள்ளது.

அடுத்த விமானத்திலேயே, உங்களது போனை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக கூறி, ₹1 கூட செலவு இல்லாமல், போனை அவர்கள் அனுப்பி வைத்ததாக, மதன் கௌரி நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய மதன் கௌரி நன்றி தெரிவித்து, துபாய் காவல்துறை மற்றும் தனியார் விமான நிறுவனத்தையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த பலரும் துபாய் உலகின் பாதுகாப்பான நாடு என்று அந்நாட்டை புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.