Home திரையுலகம் “துல்கர் சல்மானின் ‘காந்தா’ படம் சிக்கலில்”

“துல்கர் சல்மானின் ‘காந்தா’ படம் சிக்கலில்”

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், கடைசியாக நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், துல்கர் சல்மானின் அடுத்த படம் காந்தா ஆகும். இந்த திரைப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். இது தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம். கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.

இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற பாக்கியஸ்ரீ, துல்கருக்கு ஜோடியாக நடித்துள்ளார். காந்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வருகிற 14ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், காந்தா திரைப்படத்துக்கு தடையிடக் கோரி பாகவதரின் மகளின் வழி பேரன் மனோலி மனு தாக்கல் செய்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் எம். கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள காந்தா படத்தை தயாரிப்பதற்கு முன், அவரின் சட்டபூர்வ வாரிசுகளின் அனுமதி பெற வேண்டியது அவசியம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவிற்கு தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் பதிலளிக்க சிறை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.