Home திரையுலகம் பாதுகாப்பு வழங்க கோரி மனுதாக்கல் :

பாதுகாப்பு வழங்க கோரி மனுதாக்கல் :

பரிதாபங்கள் கோபி சுதாகருக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. . YouTubeபர்கள் கோபி சுதாகருக்கு மிரட்டல் விடுபோரின் மீது நடவடிக்கை எடுக்க திராவிட விடுதலை கழகம் மணு அளித்திருக்கிறது. கோபி சுதாகருக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவலாணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில தினங்களாக பேசு பொருளாக இருக்கக்கூடியது யூடியூப்பர்ஸ் கோபி சுதாகர் பரிதாபங்கள் என்ற YouTube சேனல் வழியாக வெளியிட்ட சொசைட்டி பாவங்கள் என்ற இந்த வீடியோ. பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பையும் ஒரு சில அமைப்புகளுக்கு இந்த வீடியோ தொடர்பாக எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான சூழலில் சொசைட்டி பாவங்கள் என்ற வீடியோ வெளியிட்ட கோபி சுதாகருக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழக மாநகர தலைவர் நிர்மல் குமார் என்பவர்,மனுதாக்கல் செய்திருக்கிறார்.

அவருக்கு கோபி மற்றும் சுதாகருக்கு குறிப்பிட்ட ஒரு அமைப்பை சேர்ந்த சவுத்ரி என்பவர் தொடர்ச்சியாக YouTube வாயிலாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் அந்த சிட்டி பாவங்கள் என்ற அந்த குறிப்பிட்ட எபிசோடுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதமாகவும் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டால் மற்ற சில யூடியூப்பர்களுக்கு நடந்ததெல்லாம் தெரியும் அல்லவா அதுபோல உங்களுக்கும் நடந்துவிடும் என்கின்ற மிரட்டல் விடுக்கும் தொணியில் தொடர்ச்சியாக பேசி வருவதாகவும் அவருக்கு ..எனவே, இந்த கோபி மற்றும் சுதாகருக்கு பாதுகாப்பு வழங்ககோரியும்.

இதுபோன்ற கருத்துள்ள விஷயங்களை கூறக்கூடிய கோபி சுதாகர் போன்றவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி இது போன்ற வீடியோக்கள் அதிகளவில் அவர்கள் வெளியிடுவதற்கு தமிழக அரசும் உதவ வேண்டும் என்கின்ற ஒரு மனுவினை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தற்போது கொடுக்கப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் இந்த வீடியோகளுக்கு எதிராகவும் வீடியோவை நீக்கவும் கோரி குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்த நிலையில் இன்று கோபி சுதாகருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.