முன்னணி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தான் இயக்கி நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
நான்தான் சி.எம் என்ற திரைப்படத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதில் பெரியோர்களே தாய்மார்களே, வாக்காள பெருமக்களே, ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன்.
என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பிறகு போடப்போகும் முதல் கையெழுத்து எனக்கு பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக்கூடாது என்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் சிங்காரவேலன் என்கிற பெயரில் சோத்து கட்சி என்ற கட்சியில் படகு சின்னத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
படத்தின் தலைப்பு அறிவிப்புக்கு முன்னதாகவே அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போவதாகவும் அவர் பதிவிட்டுருந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் இரவின் நிழலாகும். இது அவர் இயக்கி நடித்து தயாரித்த ஒரு தமிழ் திரைப்படமாகும்.
இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒரு வித்தியாசமான படைப்பாகும். மேலும் இந்த திரைப்படம் 2022ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.








