Home திரையுலகம் “நகை மோசடி: சூர்யா வீட்டில் பணியாற்றிய சுலோச்சனா மற்றும் குடும்பத்தினர் கைது”

“நகை மோசடி: சூர்யா வீட்டில் பணியாற்றிய சுலோச்சனா மற்றும் குடும்பத்தினர் கைது”

நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் ரூபாய் 42 லட்சம் மோசடி செய்த வழக்கில் சூர்யா வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி புகாரில் சூர்யா வீட்டில் வேலை பார்த்த சுலோச்சனா அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலஷ்மி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறைந்த விலையில் நகைகள் வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் மோசடி செய்த விவகாரத்தில் நடிகர் சூர்யா வீட்டில் வேலை செய்து வந்த சுலோச்சனா என்ற பெண்ணும் அவரது மகன் பாலாஜி, பாஸ்கர் மற்றும் அவர் சகோதரி விஜயலட்சுமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நடிகர் சூர்யாவின் தனி பாதுகாப்பு காவலர் அந்தோனி ராஜ் என்பவரிடமும் இவர்கள் 42 லட்சம் மோசடி செய்திருக்கிறார்கள். இதுவரை இரண்டரை கோடி அளவிலே அவர்கள் மோசடி செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. போலீசார் அவர்களை கைது செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக 5,500 பணம் கட்டினால் மாதம் ஒரு கிராம் தங்க காயின் தருவதாக கூறியும் அதேபோல ₹6,500 வாரம் கட்டினால் வாரத்தில் தங்க காயின் தருவதாக கூறி மோசடி செய்திருக்கிறார்கள்.

நம்ப வைப்பதற்காக சில மாதங்கள் இவர்கள் இந்த நகைகளை முழுமையாக கொடுத்ததனால அவர்களுக்கு ஆசை காட்டி பலரிடம் பணத்தை கட்ட சொல்லி பணத்தை வாங்கி இவர்கள் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

நகைகள் தங்களுக்கு கள்ள சந்தைகள் கிடைப்பதனால் குறைந்த விலையில் கொடுப்பதாக கூறி ஆசை வார்த்தை கூறி இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது. நடிகர் சூர்யா வீட்டில் வேலை செய்யும் சுலோசனா என்ற பெண் தான் இதற்கு முறையாக செயல்பட்டு அவரது மகன்கள் மற்றும் சகோதரியோடு சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அவரது தனி பாதுகாவல் இருக்கக்கூடிய அந்தோனி ராஜ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.