Home திரையுலகம் “OTT-யில் வெளியான சில நாளிலேயே நயன்தாரா ஆவணப்படம் மீது வழக்கு

“OTT-யில் வெளியான சில நாளிலேயே நயன்தாரா ஆவணப்படம் மீது வழக்கு

நயன்தாரா தொடர்பான ஆவணப்படத்தில் சந்திரமுகி படக் காட்சிகளை பயன்படுத்த தடைகோரி ஏபி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது.

நடிகை நயன்தராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக்கோரிய வழக்கில் அக்டோபர் ஆறாம் தேதி வரை பதில் மனுதாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டாக் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்த அந்த ஆவணப்படம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெக்ஸ் ஓடிடி இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நயன்தராவின் ஆவண படத்தில் அனுமதி பெறாமல் சந்திரமுகி பட காட்சிகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி படத்தின் பதிப்புரிமை பெற்ற ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ஆவண படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும் இதற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு வேண்டுமெனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் இதுவரை எந்த
பதிலும் இல்லை எனவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

எனவே ஆவணப்படத்தின் மூலமாக கிடைக்கப்பட்ட லாபத்தொகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பாக விசாரணை வந்தபொழுது இந்த பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக டாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மனுதாரர் தரப்பில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும், வழக்கில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து வழக்கில் பதில் ம்னு தாக்கல் செய்ய டாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு அக்டோபர் ஆறாம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார்.

ஏற்கனவே இதே பிரச்சினை தொடர்பாக நடிகர் தனுஷின் ஒன்றுபார் நிறுவனம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.