மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நல குறைவால் தனது 46 வயதில் உயிர்யிழந்துதிருக்கக்கூடிய நடிகர் ரோபோசங்கருக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தன்னுடைய இரங்களை பதிவு செய்திருக்கிறார்.
ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோசங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
நீர்சத்து குறைபாடு மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசமடைந்து வெண்டிலேட்டர் கருவியுடன் டாக்டர் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். ரோபோ சங்கர் அவருடைய மறைவுக்கு திரையுலகம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் தான் நேற்று இரவிலிருந்து பல்வேறு திரை பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து தமிழக வெற்றி
கழக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் வலைதல பக்கத்தில் தன்னுடைய இரங்களை பதிவு செய்திருக்கிறார்.
அதில் நண்பர் திரு. ரோபோசங்கர் அவர்கள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.
நண்பர் திரு ரோபசங்கர் அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுருக்கிறார்.








