தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவிலும் புகழுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கின.
குறிப்பாக மிஸ்டர் ஜூ கீப்பர் என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. இதற்கிடையே புகழக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நீண்ட நாள் காதலியான பென்சியை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு 2023 ஆம் ஆண்டு ரித்தன்யா என்கின்ற பெண் குழந்தை பிறந்தது. புகழின் மகள்
ரித்தன்யா தன் தந்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறு வயதிலேயே உலக சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த ஆண்டு 2 கிலோ டம்புள்ஸை அதிக நேரம் தூக்கிய குழந்தை என்கின்ற உலக சாதனையை ரித்தன்யா படைத்திருந்தார். 17 வினாடிகள் தூக்கி அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். அதாவது பிறந்த 11 மாதம் 14 நாட்களில் அதிக படிகள் ஏறிய குழந்தை என்கின்ற சாதனையையும் ரித்தன்யா படைத்திருக்கிறார். இந்த சாதனையை படைத்ததன் மூலம் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்திருக்கிறார்
ரித்தன்யா. அவர் மொத்தம் 45 படிகள் தொடர்ச்சியாக ஏறி இந்த உலக சாதனையை படைத்திருக்கிறார். இதனை புகழ் பெருமையுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரித்தனியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.








