Home திரையுலகம் திரை உலகின் இன்னொரு நட்சத்திரம் மறைந்தது…

திரை உலகின் இன்னொரு நட்சத்திரம் மறைந்தது…

நடிகர் தனுஷ் நடித்த “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் அபினய், தற்போது மரணமடைந்துள்ளார்.

கல்லீரல் பாதிப்பால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 44.

அபினய் “ஜங்ஷன்”, “சிங்கார சென்னை”, “பொன்மேகமலை” உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். சமீபகாலமாக உடல்நலக் குறைவால் மிகவும் மெலிந்திருந்த அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கலங்கச் செய்திருந்தது.

மேலும், மேல் சிகிச்சைக்காக ரூ.28.50 லட்சம் தேவைப்படுவதாக கூறி, அவர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு உதவி கோரியிருந்தார். இதையடுத்து பல திரை பிரபலங்கள் அவருக்கு உதவி செய்திருந்தனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி நடிகர் அபினய் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அபினயின் மறைவுச் செய்தி திரையுலகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.