Home திரையுலகம் “உத்தரவு வந்தும் மாறாத பாடல் நிலை – புதிய சிக்கலில் குட்பேட் அக்லி”

“உத்தரவு வந்தும் மாறாத பாடல் நிலை – புதிய சிக்கலில் குட்பேட் அக்லி”

அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுமதி இல்லாமல் பல பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஒத்தருபாயும் தாரேன்”, “இளமை இதோ இதோ”, “என்ஜோடி மஞ்சு குருவி” போன்ற பாடல்களை திரைப்படத்தில் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. அதோடு, தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தரப்பில் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், பாடல்கள் இன்னும் படத்தில் இருந்து நீக்கப்படவில்லை என இளையராஜா தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இதனால், தற்போது அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடரப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. உத்தரவு பிறப்பித்தும், பாடல்கள் நீக்கப்படாத நிலையில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருப்பது தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.