Home இந்தியா “பெண்கள் உட்பட 24,508 பேர் மாயம்: காவல் துறையின் அதிர்ச்சி! தகவல்”

“பெண்கள் உட்பட 24,508 பேர் மாயம்: காவல் துறையின் அதிர்ச்சி! தகவல்”

தலைநகர் டெல்லியில், இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 800 பேர் காணாமல் போயிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரை டெல்லியில் 807 பேர் மாயமாகி உள்ளனர் என்று காவல் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் படி, சராசரியாக தினசரி 54 பேர் மாயமாகி வருகின்றனர். இதில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் எனும் தகவலும் உள்ளது.

இந்நிலையில், மாயமானவர்களில் 235 பேர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மீதமான 572 பேரின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த ஆண்டில் மட்டும், 14,870 பெண்கள் உட்பட 24,508 பேர் மாயமானதாக காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 987 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.