நாடு முழுவதிலும் இருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி சிறந்த பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலை பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியர் ரேவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் புதுச்சேரி தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களும் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்
த








