Home இந்தியா கல்விக்கும் சுகாதாரத்துக்கும் பாலம்: பள்ளிகளில் இலவச நாப்கின்கள் – உச்சநீதிமன்றம்

கல்விக்கும் சுகாதாரத்துக்கும் பாலம்: பள்ளிகளில் இலவச நாப்கின்கள் – உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உயர்தர சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவிகளுக்கு, குறிப்பாக மாதவிடாய் காலத்தில், சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.பி. பாரதிபாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின் சாராம்சத்தைப் பார்க்கும்போது, மாதவிடாய் சுகாதார உரிமை என்பது வாழ்வுரிமையின் ஒரு பகுதியாகவும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் — அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட — நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பும் சுத்தமும் கொண்ட, தரமான, பயோடிகிரேடபிள் சானிட்டரி நாப்கின்களை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த மாதவிடாய் சுகாதார உரிமை என்பது வாழ்வுரிமையின் அடிப்படையாகவும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவும் உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருப்பதால், இந்த தீர்ப்பு நிச்சயமாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.