Home இந்தியா “குழந்தைகளுக்கான சூப்பர் இலவச வாய்ப்பு: AI மூலம் கணிதம் கற்றுக்கொடுக்கும் NCERT!”

“குழந்தைகளுக்கான சூப்பர் இலவச வாய்ப்பு: AI மூலம் கணிதம் கற்றுக்கொடுக்கும் NCERT!”

கணக்கு பாடம்னாலே கசக்குதா?
“அய்யோ, மேத்ஸ் வராதே!” அப்படின்னு பயப்படுறீங்களா?
கவலைக்கு விடுங்க. இனிமேல் கணிதத்தை ஜாலியா, கேம் விளையாடுற மாதிரி கத்துக்க ஒரு சூப்பரான வாய்ப்பை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி (NCERT) நிறுவனம் கொண்டு வந்திருக்கு.

அதுவும் நம்ம லேட்டஸ்ட் டெக்னாலஜியான செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி. நாளை முதல், அதாவது ஜனவரி 12 முதல் 15 ஆம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு ஒரு இலவச ஆன்லைன் பயிற்சியை NCERT வழங்கப் போகிறது.

இந்த பயிற்சி முற்றிலும் ஆன்லைனில் தான் நடக்கும்.

தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை, ஒரு மணி நேரம் வகுப்பு நடைபெறும். இந்த வகுப்புகளை NCERT-இன் அதிகாரப்பூர்வ YouTube சேனல், PM e-Vidya சேனல்கள், மற்றும் Jio TV மூலமாகவும் நேரலையாக பார்க்கலாம்.

வீட்டிலிருந்தபடியே, முழுக்க முழுக்க இலவசமாக இந்த வகுப்புகளில் கலந்து கொண்டு கற்றுக்கலாம்.

சரி, இந்த நான்கு நாட்களில் என்னதான் கற்றுக் கொடுப்பாங்க?

முதல் நாள் – ஜனவரி 12:
கணக்கில் நமக்கு எங்க தவறு நடக்குது? எந்த இடத்தில் புரியாமல் தடைப்படுகிறோம்? அப்படின்னு AI உதவியுடன் எளிதாக கண்டுபிடிப்பது எப்படி என்பதைக் கற்றுத் தருவாங்க.

இரண்டாம் நாள் – ஜனவரி 13:
நம்ம கற்றல் குறைபாடுகளை எப்படி சரி செய்வது? அதற்கு ஏற்ற மாதிரி டெஸ்ட் அமைப்பது எப்படி என்பதைக் கத்துக்கலாம்.

மூன்றாம் நாள் – ஜனவரி 14:
கணிதக் கருத்துகளை மனப்பாடம் செய்யாமல், படங்கள் மற்றும் விஷுவல் முறைகள் மூலம் எளிதாக புரிந்து கொள்வது எப்படி என்பதைக் கற்றுத் தருவாங்க.

நான்காம் நாள் – ஜனவரி 15 (கடைசி நாள்):
ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்ற மாதிரி, தனிப்பட்ட கற்றல் முறையை டிஜிட்டல் டூல்ஸ் மூலம் எப்படி வழங்குவது என்பதைக் விளக்குவாங்க.

“எதுக்கு மேத்ஸ்ல AI?”ன்னு கேட்கலாம். இப்போ உலகம் முழுக்க தொழில்நுட்பம் வேகமா வளர்ந்துருச்சு. வெறும் வாய்ப்பாடு மனப்பாடம் செய்வதை விட, AI டூல்ஸ் மூலம் படிக்கும்போது கஷ்டமான கணக்குகள் கூட ரொம்ப ஈஸியா புரியும்.

அதுமட்டுமில்லாம, இது விளையாட்டு போல ஆர்வமூட்டும்.
மாணவர்களை மையமாக வைத்து இந்த கல்வி முறை வடிவமைக்கப்பட்டிருக்கு.

பெற்றோர்களே, உங்களுடைய குழந்தைகளை இந்த வகுப்பில் கலந்து கொள்ள வையுங்க.
மாணவர்களே, இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

நாளை காலை 10 மணிக்கு கிளாஸுக்கு ஆஜராகிடுங்க.
கணக்கு இனிமே கசக்காது… இனிக்கும்!