2025ஆம் ஆண்டுடன் 63வது ஆசிரியர் தினம் கொண்டாடப்படுது. எப்படி இந்த நாள் வந்துச்சு? ஏன் ஆசிரியர் தினம் செப்டம்பர் ஐந்தாம் தேதி கொண்டாடப்படுகிறது அப்படின்னு இன்னும் சிலருக்கு தெரியாம கூட இருக்கலாம்.
1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஒரு மகான் பிறந்தார். அவர்தான் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவர் ஒரு பெரிய தத்துவஞானி, சிறந்த ஆசிரியர் பிறகு இந்தியாவின் குடியரசு தலைவரும் கூட. தன் வாழ்க்கை முழுவதும் கல்விக்காகவே அர்ப்பணித்தார்.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரா இருந்தவர். இந்தியாவின் தூதராவும் பணியாற்றினார். இவர் குடியரசு தலைவரான பிறகு ஒரு நாள் அவருடைய மாணவர்களும், நண்பர்களும் வந்து சார் உங்க பிறந்தநாளை கொண்டா வேண்டும் என்று கேட்டிருக்காங்க.
அப்போது அவர் சிரிச்சபடியே சொன்னாராம், என் பிறந்த நாளை கொண்டா வேண்டாம். அதுக்கு பதிலா அந்த நாளை ஆசிரியர்களுக்கு அர்ப்பணிங்க.
அந்த நாளை ஆசிரியர் தினமா ஆக்குங்க அப்படின்னு சொல்லிருக்காரு. அந்த நாள்ல இருந்துதான் இந்தியா முழுவதும் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினமா கொண்டாடப்பட்டு வருது.








