Home இந்தியா “அசுர வேகத்தில் அதிசயம் – ஆயிரம் உயிர்களை மீட்ட இந்திய ராணுவத்தின் மனிதநேயம்!”

“அசுர வேகத்தில் அதிசயம் – ஆயிரம் உயிர்களை மீட்ட இந்திய ராணுவத்தின் மனிதநேயம்!”

பொதுவாகவே ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்ட வேண்டும் என்றால் பல மாதங்கள் ஆகும். ஏன் சில வருடங்கள் கூட ஆகலாம். அதற்கு மாறாக வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை மீட்கும் முயற்சியில் வெறும் 12 மணி நேரத்தில் இந்திய ராணுவம் ஒரு பாலத்தை கட்டி அசத்தி உள்ளது.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.

அங்குள்ள மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் தாவி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டுஓடியது. வெள்ள நீர் அதிகரித்ததால் அங்குள்ள தாவி பாலம் இடிந்து விழுந்துள்ளது.

திடீரென பாலம் உடைந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இந்த பாலத்தை சரி செய்ய அதிக நேரம் எடுக்கும் என்பதால் 110 அடி பாலத்தை இந்திய ராணுவம் அமைத்துள்ளது.

சவாலான சூழல்களை தாண்டி இந்திய ராணுவம் 12 மணி நேரத்தில் இந்த தற்காலிக பாலத்தை கட்டி முடித்துள்ளனர். இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி உணவு
நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

அதுமட்டுமின்றி வெள்ளத்தில் சிக்கி தவித்த ஏராளமான குழந்தைகள் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்திய ராணுவம் மீட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை வெறும் 12 மணி நேரத்தில் கட்டி முடித்து மக்களை மீட்ட இந்திய ராணுவத்தின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.