பொதுவாக ஜனவரி மாதம் வந்தாலே பண்டிகைகள், விடுமுறைகள் என்று கொஞ்சம் ஜாலியாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் வங்கிகளுக்கும் இந்த மாதத்தில் அதிக விடுமுறைகள் இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே ஜனவரி 2026க்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டு விட்டது. அதனால் விடுமுறைக்கு முன்பே வங்கிக்கான வேலைகளை முடித்துக்கொண்டால் நல்லது.
ஜனவரி மாதத்தில் சனி, ஞாயிறு சேர்த்து மொத்தம் 16 நாட்கள் வங்கிகள் மூடப்படும். பொதுவாக எல்லா வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை எடுத்துக்கொள்கின்றன. அதோடு எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறையே.
இதனால் பண்டிகை விடுமுறைகள் இல்லாமலேயே சுமார் ஆறு நாட்கள் வங்கிகள் இயங்காது. மீதமுள்ள நாட்கள் எல்லாம் பண்டிகை அல்லது உள்ளூர் விடுமுறைகள் காரணமாக இருக்கும்.
ஜனவரி 15ஆம் தேதி பொங்கல். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த நாளில் வங்கிகள் செயல்படாது. அதனால் தென் மாநிலங்களில் வங்கிக்குச் செல்ல வேண்டிய வேலை இருந்தால் இதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கடுத்த நாள் ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம். அந்த நாளும் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் மூடப்படும். பின்னர் ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் / திருவள்ளுவர் தினம் — இதுவும் விடுமுறை.
இதற்கு அடுத்த நாள் உடனே ஜனவரி 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் இயங்காது. இந்த மாதிரி நீண்ட விடுமுறைகளில் பணத் தேவையில் சிரமம் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்வது நல்லது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வங்கி விடுமுறைகள் இருக்காது. பல விடுமுறைகள் அந்தந்த மாநிலங்களின் பண்டிகைகள் மற்றும் மரபுகளைப் பொறுத்தது.
தமிழ்நாட்டில் இருக்கும் விடுமுறை வட இந்தியாவில் இல்லாமலும் இருக்கலாம். அதனால் நீங்கள் இருக்கும் மாநிலம், நகரத்துக்கான ஆர்பிஐ விடுமுறை பட்டியலை ஒருமுறை பார்த்துக்கொண்டால் பாதுகாப்பாக இருக்கும்.
வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும் கவலை வேண்டாம். நெட் பேங்கிங், மொபைல் ஆப்ஸ், யூபிஐ சேவைகள் வழக்கம் போல செயல்படும். அவசரமாக பணம் தேவைப்பட்டால் ஏடிஎம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால் காசோலை போடுவது, டிடி வாங்குவது போன்ற வேலைகள் வங்கி திறந்த பிறகுதான் செய்ய முடியும். அதனால் அந்த மாதிரியான வேலைகள் இருந்தால் விடுமுறைக்கு முன்பே முடித்துவிடுவது சிறந்தது.








