Home இந்தியா “ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு முன் – கார் டீலர்களின் சலுகை மழை!”

“ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு முன் – கார் டீலர்களின் சலுகை மழை!”

செப்டம்பர் 22ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியில் திருத்தம் செய்யப்பட்ட குறைப்பு நடைமுறைக்கு வர உள்ளது. இதனால் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 10% வரை வரிச்சலுகை கிடைக்கவுள்ளது.

இந்த சூழ்நிலையில், விலை குறைப்பு அமலுக்கு வந்த பின் வாகன விற்பனையில் பெரும் இழப்பு ஏற்படும் என்பதால், டீலர்கள் முன்கூட்டியே சலுகை அறிவித்து இருப்பில் உள்ள வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தகவலின்படி, நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் கார்கள் இருப்பில் உள்ளன. இவற்றை 22ஆம் தேதிக்கு முன் விற்பனை செய்வதற்காக, விலை குறைப்புடன் கூடுதல் 5–6% வரை சலுகையும் டீலர்கள் வழங்க உள்ளனர்.

மேலும், இந்தியாவிலுள்ள டீலர்கள் இணைந்து சுமார் ரூ.4,000 கோடி அளவுக்கு காம்பன்சேஷன் சேஸ் செலுத்தியுள்ளனர். அந்த நிதிச்சுமையை குறைக்கவும், பழைய இருப்புகளை காலி செய்யவும் இத்தகைய சலுகை விற்பனை அறிவிக்கப்பட உள்ளது.

இதனால், புதிய ஜிஎஸ்டி வரிச்சலுகை அமலுக்கு வரும் முன், வாகனங்களை வாங்க விரும்பும் நுகர்வோருக்கு கூடுதல் சலுகை வாய்ப்பு கிடைக்கவுள்ளது.