கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முண்டக்காமட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜு, அவரது மனைவி ஷைனி மற்றும் அவர்கள் 19 வயது மகள் சித்திரப்பிரியா.
ஷைஜு வனத்துறையில் தற்காலிக தீயணைப்பு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். ஷைனி கேட்டரிங் நிறுவனத்திலும் வேலை செய்தார்.
சித்திரப்பிரியா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விமான பயிற்சி படிப்பில் சேர்ந்து படித்து வந்தார். அங்கு விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, விடுமுறை கிடைக்கும்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த ஆறாம் தேதி சித்திரப்பிரியா விடுமுறைக்காக ஊருக்கு வந்தார்.
அன்று இரவு, வீட்டின் அருகே ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நடந்த தேச விளக்கு விழாவில் தாய் ஷைனியோடு சித்திரப்பிரியா கலந்து கொண்டார்.
ஷைனி பூஜை முடிவதற்கு முன்பே வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், சித்திரப்பிரியா பூஜை முடிந்து வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷைனி, மகள் குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தார். ஆனால் யாருக்கும் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
மறுநாளும் மகளை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். மேலும், அவரது நண்பர்களிடமும் விசாரித்தனர், ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் கடந்த பின்னரும் சித்திரப்பிரியா பற்றிய எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அப்போது முண்டக்காமட்டம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் கழித்ததால் உடல் அழுகத் தொடங்கியது. கடும் துர்நாற்றம் வீசியுள்ளது;
தலை, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன. முக்கியமாக, தலையின் பின்புறத்தில் ஆழமான காயம் காணப்பட்டது.
இதனால் போலீசார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். பிணமாக கிடந்தவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், யார் கொன்றார் என்று போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுவட்டார காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை திரட்டி விசாரிக்கும்போது, சடலத்தின் அடையாளங்கள் சித்திரப்பிரியாவைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டது.
அவளது உடையில் இருந்த ஆடையை அடிப்படையாக கொண்டு பெற்றோர் சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
அடுத்ததாக, யார் கொன்றது என்பது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டது. அப்போது, ஒரு சிசிடிவி காட்சி போலீசாருக்கு முக்கிய ஆதாரமாக கிடைத்தது. சித்திரப்பிரியா காணாமல் போன நாளில், ஒரு இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்று இருந்தார்.
அந்த சிசிடிவி காட்சியை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தும்போது, அதே ஊரைச் சேர்ந்த ஆலன் என்ற இளைஞர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், சித்திரப்பிரியாவின் கொலை சம்பந்தமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
21 வயதான ஆலனும் சித்திரப்பிரியாவும் சிறுவயதிலிருந்தே பழக்கமுள்ளதாக இருந்த காதலர்கள். விடுமுறைக்காக சித்திரப்பிரியா ஊருக்கு வந்த போது, காதலனை சந்திப்பது வழக்கம். சம்பவத் அன்று இருவரும் ஊருக்கு வெளியே உள்ள ரப்பர் தோட்டத்திற்கு சென்று தனிமையில் பேசி இருந்தனர்.
அந்த நேரத்தில் ஆலன் குடிபோதையில் இருந்தார். சித்திரப்பிரியாவின் செல்போனைப் பார்த்த போது, மற்றொரு இளைஞருடன் அவர் இருப்பதை உணர்ந்து கோபமடைந்தார்.
இதனால், ஆலன் சித்திரப்பிரியாவிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார். கோபம் அடைந்த அவர், கீழே கிடந்த கல்லை எடுத்து சித்திரப்பிரியாவின் தலையில் தாக்கி கொல்லினார்.
பிறகு, சடலத்தை அப்படியே விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவ தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்கு தொடர்பு இருக்குமா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.








