Home இந்தியா பட்ஜெட் 2026: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

பட்ஜெட் 2026: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஒன்றிய பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவில் பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்சமாக ₹7,84,678 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட பாதுகாப்புத் துறைக்கு 15% நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நெடுஞ்சாலைத் துறைக்கு ₹3,09,875 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ₹1,97,023 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறைக்கு ₹1,40,528 கோடியும், கல்வித் துறைக்கு ₹1,39,289 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறைக்கு ₹1,06,530 கோடி ரூபாயும், நகர்ப்புற மேம்பாட்டுத் துறைக்கு ₹85,522 கோடியும், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ₹21,632 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கு ₹15,357 கோடி ரூபாயும், வெளியுறவுத் துறைக்கு ₹22,119 கோடி ரூபாயும் ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.