வருமானத்தை மறைத்தால் 100% அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானவரி சட்டம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், ஏப்ரல் 1 முதல் புதிய வருமானவரி சட்டம் அமலுக்கு வரும் என தெரிவித்தார்.
தனிநபர்கள் வழக்கம்போல் ஜூலை 31ஆம் தேதி வரை வருமானவரி தாக்கல் செய்யலாம் என்றும், மோட்டார் வாகன விபத்தில் கிடைக்கும் காப்பீட்டு தொகைக்கு வரி விதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.
வருமானவரி தாக்கல் செய்யும்போது பொய்கணக்கு காட்டினாலோ அல்லது தவறான தரவுகள் வழங்கினாலோ 100% அபராதம் விதிக்கப்படும் என்றும், வரி சார்ந்த அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பதை தெரிவிக்க வாய்ப்பு வழங்கும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.








