முதலீடுன்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் தங்கம் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா தங்கம் எல்லாம் பழைய கதை. ஏஐ(AI) யுகத்தோட புதிய தங்கம் எது தெரியுமா? அது நம்ம வீட்டு வயர்கள்ல இருக்கிற செம்பு. ஆமாங்க இந்த செம்புதான் இனிமே உலக பொருளாதாரத்தோட ராஜாவா இருக்க போகுதுன்னு. பிரபல சந்தை நிபுணர் ஆம்பரிஷ் பாலிகா ஒரு அதிர்ச்சியான கணிப்பை வெளியிட்டுருக்காரு.
இதனால ஒரு அரசு நிறுவன பங்கு பலமடங்கு லாபம் தரும். மல்டி பேக்கரா மாறப்போகுதுன்னும் சொல்லிருக்கார். வாங்க அந்த பங்கு எதுன்னு விரிவா பார்க்கலாம். முதல்ல ஏன் திடீர்னு செம்பு மேல இவ்வளவு கவனம். இதுக்கு காரணம் ஏஐ (AI) புரட்சி மற்றும் பசுமை எரி சக்திதான்.
ஏஐ (AI) மற்றும் டேட்டா சென்டர் வளர்ச்சி காரணமா செம்போட தேவை விண்ணை தொடும். தொழில்துறையில் செம்புதான் புதிய தங்கம்னு பேச்சுகள் எழுந்திருக்குன்னு. ஆம்பரிஷ் பாலுக்கா சொல்லிருக்காரு. சுருக்கமா சொன்னா செம்புதான் இனிமே இந்த டிஜிட்டல் மற்றும் பசுமை யுகத்தோட புதிய எண்ணது புதிய தங்கம். சரி தேவை அதிகரிக்குது உற்பத்தி அதிகரிச்சா போச்சுன்னு நீங்க நினைக்கலாம். இங்கதான் மெயின் ட்விஸ்டே இருக்கு.
ஒரு புதிய செம்பு சுரங்கத்தை ஆரம்பிக்க குறைஞ்சது 10ல இருந்து 15 வருஷம்க்கும். டிரம்ப் வரிகள், வினியோகிக்க கட்டுப்பாடுகள்னு பல உலகலாவிய காரணங்களால செம்போட உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை ஏறிக்கிட்டே இருக்கு. இப்ப நம்ம ஹீரோ என்ட்ரிக்கு வருவோம்.
அதுதான் இந்துஸ்தான் காப்பர் லிமிடட். ஏன் இந்த பங்கு மேல இவ்வளவு கவனம் ஏன்னா இந்தியாவிலேயே சுரங்கத்தில் இருந்து செம்பை வெட்டி எடுத்து. அதை இறுதி பொருளா மாத்துற வரைக்கும் எல்லா வேலையும் செய்யற ஒரே ஒரு ஒருங்கிணைந்த அதுவும் இது ஒரு அரசு நிறுவனம். அவங்களோட மெகா பிளான் என்னன்னா தங்களோட தாது உற்பத்தியை 2031க்குள்ள மூணு மடங்குக்கு மேல அதிகரிக்க போறாங்க.
அதாவது இப்போ 3.47 மில்லியன் டன்னா இருக்கிற உற்பத்தியை 12.2 மில்லியன் டன்னா அதிகரிக்க போறாங்க. இந்த அறிவிப்புக்கு பிறகு இந்துஸ்தான் காப்பர் பங்குகோட விலை ராக்கெட் வேகத்தில் ஏறி இருக்கு.
கடந்த ஒரு மாசத்துல மட்டும் இந்த பங்கு 26%த்துக்கும் அதிகமா உயர்ந்திருக்கு. இந்த ஏற்றம் இருந்தும் கூட இப்ப முதலீடு செஞ்சா கூட அடுத்த ரெண்டு மூணு வருஷத்துல் இந்த பங்கு பலமடங்கு லாபம் கொடுக்கும்னு ஆம்பிரீஷ் பாலிகா நம்புறாரு. குறைஞ்சது ரெண்டு வருஷ கண்ணோட்டத்தில செம்புக்கான வளர்ச்சி பலமடங்கு அதிகமா இருக்கலாம்னு அவர் சொல்லிக்காரு.
ஆனா இதுல ஒரு சின்ன ரிஸ்க்கும் இருக்கு. கடந்த ஒரு வருஷத்துல இந்த பங்கு 10% சரிஞ்சிருக்கு. இப்போ அதோட ஆர்எஸ்ஐ 70க்கு மேல இருக்கிறதால இது அதிகமா வாங்கப்பட்ட பகுதியில இருக்கலாம்னு சில நிவனர்கள் சொல்றாங்க.








