Home இந்தியா டெல்லி வரை உணர்ந்த நிலநடுக்கம் – ஹரியானாவில் பரபரப்பு

டெல்லி வரை உணர்ந்த நிலநடுக்கம் – ஹரியானாவில் பரபரப்பு

ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரோத்தக் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதால், மக்கள் அச்சமடைந்தனர்.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.