தங்கத்தின் விலை நாளும் உயர்ந்து வருவதால், அது குறித்து மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், ஒருவர் தன்னுடைய வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது முக்கிய கேள்வியாகிறது.
- ஒரு திருமணமான பெண் அதிகபட்சம் 500 கிராம் வரை தங்க நகைகள் வைத்திருக்கலாம்.
- திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை தங்கம் வாங்கி வைத்திருக்கலாம்.
- ஆண்களாக இருந்தால் அதிகபட்சம் 100 கிராம் வரை தங்கம் கையிருப்பில் வைத்திருக்கலாம்.
இதன்படி, ஒரு திருமணமாகாத மகளை கொண்டிருக்கும் சிறிய குடும்பத்தில் அதிகபட்சம் 850 கிராம் தங்கம் வைத்திருக்கலாம் என கணக்கிடப்படுகிறது.
இவை அனைத்தும் ஒரு தோராயமான மதிப்புதான். ஒருவர் வீட்டில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு அவர்களது வருமானத்திற்கு ஏற்றதாக இருந்தால் எந்த சிக்கலும் இல்லை.
இதற்கு மேல் தங்கம் வாங்கி வைத்துக் கொள்வது சட்டப்படி விரோதம் அல்ல, என்றாலும் அதற்கான வருமானத்தை கணக்கில் காட்ட வேண்டும்.
இதே தான் சட்டப்படி சரியானது. வருமான வரித்துறை பொதுவாக ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கிறார் என்பதைக் கேள்வி எழுப்பாது, ஆனால் அந்த தங்கம் எப்படி வாங்கப்பட்டது மற்றும் வருமானம் எங்கிருந்து வந்தது என்பதைக் கேள்வி எழுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








