Home இந்தியா “இப்படி வந்தால் நகை வாங்க முடியாது!” – திடீர் கட்டுப்பாட்டால் பரபரப்பு

“இப்படி வந்தால் நகை வாங்க முடியாது!” – திடீர் கட்டுப்பாட்டால் பரபரப்பு

முற்கா போன்றவற்றை அணிந்து முகத்தை மூடி வரும் வாடிக்கையாளர்களுக்கு நகைகள் விற்பனை செய்யப்படாது என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் நூதன அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ஜான்சியில் உள்ள சுப்ரி பஜாரைச் சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். முகமூடி போன்றவற்றை அணிந்து நகைக்கடைகளுக்குள் புகுந்து கொள்ளையடித்து செல்லும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் அனுமதியுடன் இந்த அறிவிப்பை போஸ்டராக ஒட்டி வைத்துள்ளனர்.