நாட்டின் ஒட்டுமொத்த பொறயியல் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்திருக்கிறது. சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்ஐஆர்எப் தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சென்னை ஐஐடி முதலிடத்தை பெற்றிருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஐஐடி உள்ளிட்ட வேறு எந்தெந்த நிறுவனங்கள் முதல் அந்த தரவரிசை பட்டியல் முன்னிலை பெற்றிருக்கின்றன.
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்ஐஆர்எப் தரவரிசை பட்டியல் 2025ஆம் ஆண்டிற்கான பட்டியலானது தற்பொழுது மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானால் டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது
அதன் அடிப்படையில் ஒட்டுமொத்த பிரிவில் தற்பொழுது ஏழாவது முறையாக சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
அது மட்டுமில்லாமல் பொறயியல் பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் சிறந்த கல்வி நிறுவனங்களான பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டு வரும் நிலையில்.
தற்பொழுது அந்த தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கோவை அமிருதா பல்கலை கழகம் பிஎஸ்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிருஷ்ணம் பெண்கள் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுயுள்ளது.
சிறந்த பல்கலைக்கழங்களுக்கான தரவரிசை பட்டியலில் கோவை அமிருதா பல்கலை கழகம் எட்டாம் இடத்தை பிடித்துள்ளது அதேபோல் மருத்துவ கல்லூரி பிரிவில் வேலூரினுடைய சிஎம்சி கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
கல்லூரிகளுக்கான பிரிவில் கோவை கிருஷ்ணம்மாள் பெருங்கல் கல்லூரி ஒன்பதாம் இடத்தையும் பிஎஸ்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பத்தாம் இடத்தையும் பிடித்துள்ளது
சிறந்த பொது பல்கலைக்கழகத்திற்கான பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும் பாரதியார் பல்கலைக்கழகம் பத்தாவது இடத்தையும் 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த கல்வி நிர்வகான பட்டியலில் பெற்றுள்ளது
அதுமட்டுமல்லாமல் மருத்துவ கல்லூரிகளுக்கான பிரிவில் சபீதா மருத்துவக்கல்லூரி இந்த முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது . ஒட்டுமொத்தமாக 7692 கல்லூரிகள் பங்கேற்ற இந்த ஒரு நிகழ்வு என்பது 17 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதன் கீழ் இந்த விருதுகள் என்பது வழங்கப்பட்டுள்ளது
இந்த ஆண்டு 2025ஆம் ஆண்டிற்கு சஸ்டைனபிள் டெவலப்மென்ட் கோல்ஸ் என்ற அடிப்படையில் புதியதாக ஒரு பிரிவு இணைக்கப்பட்டு அந்த ஒரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த பிரிவில் தற்பொழுது சென்னை ஐஐடி முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக முதல் பிரிவை முதல் இடத்தை ஏழாவது முறையாக சென்னை ஐஐடி என்பது ஒட்டுமொத்த பிரிவில் பெறுவதும் மிக முக்கியமான ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.








