Home இந்தியா “iPhone 17 வாங்க கூட்ட நெரிசல் – மும்பை ஆப்பிள் ஸ்டோரில் தள்ளுமுள்ளு, மோதல் பரபரப்பு”

“iPhone 17 வாங்க கூட்ட நெரிசல் – மும்பை ஆப்பிள் ஸ்டோரில் தள்ளுமுள்ளு, மோதல் பரபரப்பு”

மும்பையில் iPhone 17 சீரிஸ் போனை வாங்க குவிந்திருந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. apple நிறுவனம் தன்னுடைய iPhone 17 சீரிஸ் போன்களின் விற்பனையை இந்தியாவில் இன்று தொடங்கியிருக்கிறது.

இந்த போன்களை டெல்லி மற்றும் மும்பையில் அமைந்திருக்கும் apple நிறுவனத்தின் நேரடி விற்பனை நிறுவனங்களில் வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏரளமான வாடிக்கையாளர்கள் நள்ளிரவு முதலே கடைகளில் முன்பு குவிந்தனர்.

இந்த நிலையில் மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ்உள்ள ஷோரூமுக்குள் முண்டி அடித்து கொண்டு பலரும் நுழைய முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாறி மாறி தாக்கி கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.