கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் தடசான் தாலுக்காவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் நேற்று இரவு அதிரடி கொள்ளை சம்பவம் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் வங்கி ஊழியர்கள் பணியை முடித்து வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ராணுவ வீரர்கள் அணியும் பச்சை நிற உடையில், முகமூடி அணிந்த கும்பல் வங்கிக்குள் புகுந்தது. நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மேலாளர் மற்றும் பணியாளர்களை மிரட்டி, கட்டிப்போட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், வங்கி லாக்கரில் இருந்த ரூ.8 கோடி பணம் மற்றும் சுமார் 50 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு, குற்றவாளிகள் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்கள் மராட்டி மாநிலத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.







