Home இந்தியா “லாரி லாரியா குவியும் ஆப்பிள்… விலையும் இனிப்பு, சுவையும் இனிப்பு!”

“லாரி லாரியா குவியும் ஆப்பிள்… விலையும் இனிப்பு, சுவையும் இனிப்பு!”

சிம்லாவில்லிருந்து லாரி லாரியாக திருநெல்வேலியில் குவியும் ஆப்பிள்களால் ஒரு கிலோ ஆப்பிளின் விலை 100 ரூபாயாக குறைந்துள்ளது.

திருநெல்வேலி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். கடந்த சில மாதங்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து சாமானிய மக்களுக்கு எட்டா கனியாக இருந்த ஆப்பிளின் விலை தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் கிடுகிடுவென குறைந்துள்ளது.

லாரி லாரியாக சிம்லாவில்லிருந்து ஆப்பிள்கள் தமிழக சந்தைக்கு வரதொடங்கியுள்ளதால் திருநெல்வேலியில் ஒரு கிலோ ஆப்பிள் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை சரிவு பொதுமக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரை மிகுந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. பல வகைகளில் மிகவும் முதன்மையானதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படுவதுமான ஆப்பிள் சத்துக்களின் சுரங்கம் என்றே சொல்லலாம்.

ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான 14% வைட்டமின் சியை ஒரே ஒரு ஆப்பிள் வழங்குவதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக மிக முக்கிய பங்கு வைக்கிறது.

இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் மூளை செல்களை பாதுகாத்து பர்கின்சன் போன்ற நோய்கள் வருவதை தடுப்பதாகவும் இதய ஆரோக்கியத்தை பேணுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த ஆப்பிளின் விலை கடந்த நான்கு ஐந்து மாதங்களாக உச்சத்திலேயே இருந்தது. தரத்தை பொறுத்து ஒரு கிலோ ஆப்பிள் 300 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டதால் பல குடும்பங்கள் ஆப்பிள் வாங்குவதையே தவிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவே கூறலாம்.

தற்போது பார்த்தீர்கள் என்றால் இமாச்சல பிரதேசம் ஜம்மு காஷ்மீர் உத்தராகாண்ட் போன்ற மாநிலங்களில் ஆப்பிள் அறுவடை சீசன் கலை கட்டியுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து லாரி லாரியாக சிம்லா ஆப்பிள்கள் தமிழகத்தின் சந்தைகளான கோயம்பேடு, மதுரை, திருநெல்வேலிக்கு வர தொடங்கியுள்ளன.

திருநெல்வேலி சந்தையில் ஆப்பிள்கள் மலைபோல் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ சிம்லா ஆப்பிள் தரத்தை பொறுத்து 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.