உத்தரகண்டில் பிரசவம் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததால் கர்ப்பிணி ஒருவர் தரையில் அமர்ந்து குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகண்டு மாநிலம் ஹரித்வாரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த 30ஆம் தேதி இரவு பிரசவ வலியுடன் கர்ப்பிணி ஒருவர் வந்துள்ளார்.
அவருடன் உறவுக்கார பெண் ஒருவர் மட்டும் இருந்துள்ளார். அந்த பெண் பிரசவம் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. அதற்குள் அப்பெண்ணுக்கு பிரசவ வழி மேலும் அதிகமாகிய நிலையில் அங்கிருந்து மருத்துவ பணியாளர்கள் எந்த வித உதவியும் செய்ய முன்வரவில்லை.
நகர்ந்து கூட செல்ல முடியாமல் வலியால் துடித்து கொண்டிருந்த கர்ப்பிணி தரையிலேயே அமர்ந்து குழந்தையை பெற்றெடுத்தார். அதுமட்டுமின்றி குழந்தை பிறந்த பிறகு அப்ப பெண்ணை செவலியர்கள் ஆபாசமாக பேசி கேலி கிண்டல் செய்ததாகவும் தெரிகிறது.
இதனிடையே கர்ப்பிணி தரையில் அமர்ந்து பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து கர்ப்பிணிக்கு நிகழ்ந்த கொடூரம் தொடர்பாக தற்காலிக மருத்துவர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.








